
முன்னுரை
எல்லையறு பரம்பொருள் போல் என்றுமுள தென்றமிழில், முன்னோர் வளர்த்த முத்தமிழில், இடையிருட் காலத்தடைகளால் இலக்கிய வளர்ச்சி இடையூறு பட்டது அந்நிலை யகற்ற விரும்பிய பெருமகனார், பேராசிரியர், சுந்தரனார் அவர்கள் மனோன்மணீயத்தை முத்தமிழ் நாடகமாக, நாடகக் காப்பியமாக, மெய்யுணர்த்தும் பயன் இலக்கியமாகப் படைத்துத் தந்துள்ளார். இத்தகைய சீர்த்தி பெற்ற இந்நாடகத்தின் சிறப்பியல்புகளை யெல்லாம் திறனாய்வு நோக்குடன், இலக்கிய இன்பம் பெற விழைவோர் பெற்று மகிழச் செய்வதே “மனோன்மணீய ஆய்வுக் கட்டுரைகள்” என்னும் இந்நூலின் நோக்கம். பட்ட வகுப்பில் பயிலும் மாணவ மணிகள் மனோன்மணீயத்தைப் பயின்று பயன் பெறவும், தேர்வில் வாகை சூடவும் இச்சிறு நூல் உறுதுணையாகும் என்பது என் எண்ணம். அவ்வெண்ணம் ஏற்றம் பெற “ எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந்தமிழன்னை” யின் அருளினை வேண்டுகின்றேன்.
இந்நூலினுக்கு மதிப்புரையும் அணிந்துரையும் அளித்த எமது ஆசிரியப் பெருந்தகைகளாகிய பேராசிரியர். கு. பா. துரைசாமி, எம் ஏ, பி ஒ எல். அவர்கட்கும், திருமிகு க. ர. அக்கப்பனார், எம்.ஏ அவர்கட்கம் என் மனம் நிறைந்த வணக்கத்தையும் இந்நூலின் ஆக்கத்திற்குக் காரணமாகிய மாணவர்கட்கும், நூலினை அழகிய முறையில் அச்சிட்டுத் தந்த முருகன் அச்சகத்தாருக்கும் எனது நன்றியையும் உரிமைப்படுத்துகின்றேன்.
கா. அரங்கசாமி.
[sdm-download id=”392″ fancy=”1″ new_window=”1″ color=”orange” button_text=”தரவிறக்கம்”]