
பூந்துறை நாட்டுக் காட கூட்டக் கொங்கு வேளாளா் வரலாறு
பதிப்புரை
கொங்கு நாட்டில் முதன்மை நாடு எனப் புகழ் கொண்டது பூந்துறை நாட்டின் வரலாற்றையும், பூந்துறையில் புகழ்மேம்பட விளங்கிய காடகூட்டப் பெருமக்களின் வரலாற்றையும் இந்நூல் சுருக்கமாகக் கூறுகிறது அத்துடன், கொங்கு நாட்டின் தனித்தன்மை, கொங்கு வேளாளா்கள் இம்மண்ணின் மக்கள், கூட்டப்பெயா்களின் விளக்கம் பற்றிய ஆய்வும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ஆய்வுக்கும் வரலாற்றுக்கும் முடிவு இல்லை. இன்றைய நிகழ்வுகள் நாளைய வரலாறு. ஆதலின் எதனையும் வரலாற்றுப் பார்வையுடன் அணுகுவது அறிவியல் நெறியாகும் அம்முறையில் தோன்றிய இச்சிறுநூல் பொதுநிலையில் செய்திகளைக் கூறிச்செல்கிறது.
கல்வெட்டறிஞா் புலவா் செ. இராசு அவா்கள் இவ்வரிசையில் பல ஆய்வுநூல்களை வெளியிட்டுள்ளார்கள். அவா் தம்மிடம் இருந்த காடகூட்டம் பற்றிய குறிப்புக்களைத் தந்தமைக்காக எமது மனம் நிறைந்த நன்றிகளை அவா்க்குப் படைக்கின்றேன்.
மற்றும் இந்நூல் உருவாகக் துணை நின்ற நண்பா்கள் புலவா்.பொன்முகிலன், புலவா் இரா. பழனி வேலு, புலவா் பாரிமணியம் முதலானோர்க்கும், அழகுமிளிர அட்டையை உருவாக்கிய ஈரோடு கவிதா அச்சகத்தார்க்கும் சிறப்பாக நூலை அச்சிட்டுதவிய கோபி அன்பு அச்சகத்தார்க்கும் எமதுமனம் நிறைந்த நன்றிகள்.
[sdm-download id=”401″ fancy=”1″ new_window=”1″ color=”orange” button_text=”தரவிறக்கம்”]
