
பதிப்புரை
“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகிறான்” – இக்கருத்து அனைத்துலக மக்கட்கும் பெரிதும் பொருந்தும். வரலாறு அறியா இனம் அடிமைப் படுகுழியில் விழும். அறிஞர்களைப் போற்றாத இனம் அறிவு வறுமையால் வெறுமைப் பட்டழியும். மாணவர்கள் மண்ணின் மதிப்பை அறிந்திட, அம்மண்ணின் மதிப்பை வளர்த்த அறிஞர்களை மதித்திட, அன்னவர்தம் வரலாறு – வாழ்வின் வான்பயன் – அறிதல் வேண்டும். அவ்வண்ணம் மாணவர்கட்குப் பயன்படத்தக்க வகையில் எம்துறை வெளியிடும் இரண்டாவது ஆய்வுத்தொகுப்பு இந்நூல்
இந்நூலினைப் பாடமாக்கிட இசைவுதந்த ஈரோடு கலைக் கல்லூரித் (தன்னிலை) தமிழ்ப்பாடத் திட்டம் குழுவிற்கும். எங்கள் தன்னாட்சிக் கல்லூரித் தமிழ்ப்பாடத் திட்டக்குழுவிற்கும் எமது அகம் கனிந்த நன்றிகள்.
[sdm-download id=”406″ fancy=”1″ new_window=”1″ color=”orange” button_text=”தரவிறக்கம்”]