சித்தாந்த நன்மணி. முதுபெரும்புலவர். தமிழ்மாமணி. திருமுறைத் தென்றல். பாவலர். பேராசிரியர் முனைவர் கா.அரங்கசாமி. கோபி
பொன்னுலகு கண்ட நாள் : 22-10-1937
புகழுடம்பு எய்திய நாள் : 30.10.2016
கல்வி : எம்.ஏ.. எம்ஃபில். பி.எச்டி.
பொறுப்பு பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர். ரிடர்.பொறுப்பு முதல்வர் (ஓய்வு). கோபி கலை அறிவியல் கல்லுாரி (தன்னாட்சி). கோபிசெட்டிபாளையம். ஈரோடு மாவட்டம்
கல்வி பணிகள்:
- 1961-1963 வரை சிக்கய்ய நாயக்கர் கல்லுாரி. ஈரோடு
- 1963-1964 பூண்டிபுட்பம் கல்லுாரி. தஞ்சாவூர்.
- 1964-1968 சிக்கய்ய நாயக்கர் கல்லுாரி. ஈரோடு
- 1968-1996 கோபி கலைஅறிவியல் கல்லுாரி (தன்னாட்சி)
- படைப்புக்கள் 28 நுாற்கள் மற்றும்
- 1000 மேற்பட்ட கவிதை கட்டுரைகள்
- இரு நுாற்கள் தமிழ்நாடரசின் பாராட்டைப்பெற்றவை
பொழிவுகள் :
- கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கத்தில் 11 நாட்கள் சொற்பொழிவு
- பம்பாய்த் தமிழ்சங்கத்தில் 5 நாட்கள் சொற்பொழிவு
- இலண்டன் தமிழ்சங்கத்தில் 2 நாட்கள் சொற்பொழிவு
- இலண்டன் லெவிசம் சிவன் கோயில் மற்றும் பல கோயில்களில் 10க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள்
- இலண்டன் தொலைக்காட்சியில் நேர்காணல். பாரிசு தொலைக்காட்சி மற்றும் சென்னைத் தொலைக்காட்சியில் நேர்காணல் – ஆயிரக்கணக்கான மேடைப் பொழிவுகள்.
- கொங்கு. சாதுசங்கொலி. சிவசாந்தலிங்கர். மக்கள் சிந்தனை இதழ்களில் பல கட்டுரைகள்
- கொங்கு களஞ்சியம் இரு தொகுதிகளில் ஆசிரியர் குழுவில் ஒருவர்.
- உலக மொழிகளில் 1800 மொழிகட்குத் தமிழ் வேர்ச்சொல் தந்ததையும் 180 மொழிகட்குத் தமிழ் உறவுப்பெயர் தந்ததையும் ஆராய்தது. மந்திரம். சித்தர் – வாசி – யோகம். சிவஞானபோதம். திருமந்திரம். திருக்குறள் மெய்யியல் ஆய்வுகள்.
- அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த 12வது உலகச்சைவ மாநாட்டு ஆய்வுக் கோவைப் பொறுப்பேற்று இருதொகுதிகள் வெளியிட்டமை. இரத்தினகிரி 3வது உலகத் திருக்குறள் மாநாட்டு ஆய்வுக் கோவைப்பணி குறிக்கத்தக்கவையாம்
நுாற்பட்டியல் :
- வானிலா – கவிதை நாடகம் – தமிழ்நாடரசின் கவிதைப்பாராட்டைப் பெற்றது
- தீரன்சின்னமலை – விடுதலைவீரன் – மேடை நாடகம் – தமிழ்நாடு அரசின் முதற்பாராட்டைப் பெற்றது
- கொங்குக் கட்டுரை மணிகள் (பல அறிஞர்களின் கட்டுரைத் தொகுப்பு)
- கொங்கு நாட்டுப் புலவர்கள் (பல அறிஞர்களின் கட்டுரைத் தொகுப்பு)
- கொங்கு நாட்டுப் புறப்பாடல்கள் ஆய்வுக்கட்டுரைகள் (பல அறிஞர்களின் கட்டுரைத் தொகுப்பு)
- அறவியலும் பண்பாடும்
- பூந்துறை நாட்டு வேளாள வரலாறு
- பூந்துறை புராணம் – ஏட்டில் இருந்து பதிப்புச்செய்தது
- நிதுக்காரய்யன் – வட்டார வழக்குப்புதினம்
- மோரு்ர் காங்கேயன் – வரலாற்றுக்கவிதை நாடகம்
- பாளையக்காரர் – பட்டக்காரர் – இருமொழிக் கருத்தாய்வுத்தொகுப்பு (கட்டுரைகள் மற்றும் பதிப்பு)
- மனோன்மணிய ஆய்வுக் கட்டுரைகள்
- தமிழ்க்கல்வெட்டுக்களில் அறவியல் கோட்பாடுகள் (கி.மு.3 முதல் கி.பி.19 வரை – முனைவர் பட்ட ஆய்வு)
- கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள் – ஆய்வுத் தொகுப்பு
- கருணை அந்தாதி – கவிதைப்படைப்பு
- மொழியும் தரமும் – அறிவியல் பார்வை (பொறிஞர்.கணேசன் அவர்களுடன் -9 தொகுதிகள்) – (தமிழ்மொழிக்கான தரக்கோட்பாடு விளக்கம்).
25) சிவசமய வரலாறு
26) திருமந்திரம் தொகுதி ஐ (முதல் ஆயிரம் பாடல்கள் உரை)
27) திருமந்திரம் தொகுதி ஐஐ (1001 – 2000 பாடல்கள் உரை)
28) கபிலர் (சாகித்திய அகாடமி பதிப்பு)
- உலகத் திருக்குறள் பேரவையின் (குன்றக்குடி தலைமையகம்) மேனாள் அமைப்பாளர். மேற்கு மண்டலச் செயலாளர். ஈரோடு மாவட்டத் தலைவர். துணைப்பொதுச் செயலாளர். மற்றும் கோபி வட்டக்கிளைத் தலைவர். திருக்குறள் மாநாட்டு ஆய்வுக் கோவைச் செயலாளர்.
- கோபி தமிழ்ச்சங்கம். தெய்வநெறிக்கழகம் – ஆகியவற்றின் வாழ்நாள் தலைவர். தென்னிந்திய வரலாற்றுப் பேரவைத் தலைவராக இருந்து (ஏழு ஆண்டுகள்) 1000 மேற்பட்ட கல்வெட்டுக்கள் படியெடுத்தும் 100க்கும் மேற்பட்ட ஏடுகளைத் தொகுத்தும். மறைந்த மயிலாபுரி. அயிலாபுரிப் பட்டணங்களை ஆய்ந்தும். ஊஞ்ச வனப் பாடல்களைத் தொகுத்தும். ஈரோடுவாசவி. வேளாளர். கோபி கலைஅறிவியல் கல்லுாரிகளில் அருங்காட்சியகம் அமைய துணை செய்தும். ஈரோடு அருங்காட்சியகம் அமையத்துணை நின்றும் 55கட்டு ஏடுகளைத் தந்தும் செயல் செய்தமை குறிக்கத்தக்கவை.
- கம்பன் கழகம். கோபி. முருகன் முத்தமிழ் மன்றம் கோபி – பல்வேறு பொறுப்புகள்
- திருமந்திர வகுப்பு நடத்தியும். திருமந்திரத்துக்கு நால்வகைப்பட்ட உரைகள் (இயல்பு. மந்திர. தந்திர. ஞானப்பொருள்) வரைந்ததும். தேவார வகுப்புகள் 25 ஆண்டுகள் மேலாக நடத்தியது.
- 20க்கும் மேற்பட்ட எம்ஃபில் பட்டம். 10க்கும் மேற்பட்ட முனைவர் பட்டம் பெற்ற ஆய்வாளர்கட்கு நெறியாளர்.