
1.அறவியல் விளக்கம்
முன்னுரை:
அறமே கடவுள் நிலை. அறம் தருவதே உண்மை இன்பம். அறவழியே, உலகில் அமைதியை – அன்பை – நிலை நிறுத்தும் பண்பாடு நாகரிகம் யாவும் அறவுணர்வின் வெளிப்பாட்டால் உருவானதாகும். மனிதகுலம் பெற்றுள்ள சிறப்புக்கள் யாவும் அறத்தினால் விளைந்தவையே. அறத்தின் பயன்பாட்டை விளக்கும் இயல் அறவியல் (நுவாiஉள) எனப்படும். எனவே மனிதனை முழுநிறை மாந்தனாக்கிப் பின்னர் தெய்வ நிலை பெறச் செய்யும் அறவியலின் தோற்றம் – வளர்ச்சி பற்றி அறிவது மனிதனின் தலையாய கடமையாகும்.
அறம் – சொற்பொருள் விளக்கம்:
“அறு”என்னும் வினைச் சொல்லடியாகப் பிறந்தது “அறம்” என்னும் சொல்லாகும். “அறு “ என்னும் அடிச் சொல்லிற்கு “அறுத்துச் செல், “வழியை உண்டாக்கு” “உருவாக்கு” “துண்டி” “வேறுபடுத்து” எனப் பலவகைப் பொருள்கள் வழங்குகின்றன. “அம்” என்னும் தொழிற்பெயர் விகுதி அறுத்தலாகிய தொழிலை உணர்த்துகிறது என்பர்1 எனவே, மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க நெறிமுறைகளே அறம் எனக் கருதலாம்.
“அறம்” தருகின்ற பரந்தபொருளைத் தன்னகத்தே உட்கொண்ட ஒரு முழுமையான சொல் ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழிகளிலோ இல்லை எனலாம். “அறம்” என்னும் சொல்லைப்பல வகையாலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர். ‘Righteousness’ ‘Ethics’ ‘Good Conduct’ ‘Morality’ ‘Duty’ ‘Virtue’ ‘Goodbehavour’ என்பன அவற்றுள் சில… இவை அறத்தின் ஒவ்வொருதிறத்தை மட்டுமே தெளிவு படுத்துகின்றன” என்பர். 2
அறம் பற்றிய விளக்கங்கள்:
அறம் 32 என்பர். அவையாவன 1.மருத்துவச்சாலை 2.ஒதுவார்க்குணவு 3. அறு சமயத்தோர்க்கு உணவு 4. பசுவிற்கு உணவு 5. சிறைப்பட்டார்க்கு உணவு 6. பிச்சையிடல் 7. (ஏழைகட்குத்) தின்பண்டம் நல்கல் 8. அறமாகச் சோறு வழங்கல் 9. குழந்தைப் பேற்றுக்கு உதவி செய்தல் 10.(அநாதைக்) குழந்தைகளை வளர்த்தல் 11. குழந்தைகட்குப் பால் வழங்குதல் 12.(அநாதைப்) பிணத்தை அடக்கம் செய்தல் 13. ஆறமாகத் தூரியம் வழங்குதல் 14. சுண்ணப் பொடி தரல் 15. நோய்க்கு மருந்துதரல் 16. துணிகளை வண்ணம் செய்தல் 17. முடிதிருத்துதல் 18. கண் கண்ணாடி வழங்கல் 19. காதோலை 20. கண் மருந்து 21. தலைக்கு எண்ணெய் இடல் 22. போகம் தரல் 23. பிறர்துயர் காத்தல் 24. தண்ணீர்ப் பந்தல் 25. மடம் அமைத்தல் 26. தடம்-வழி அமைத்தல் 27. கா (நந்தவனம்) 28. பசுக்கள் உராயத் தறி நடல் 29. விலங்குகட்கு உணவு 30. ஏறுவிடல் 31. உயிர்காத்தல் 32. கன்னிகாதானம் என்பனவாம் 3.
“அறம் என்னும் சொல்லுக்குத் தருமம், புண்ணியம், தகுதி, ஞானம், நோன்பு, தீப்பயன் உண்டாக்கும் சொல், அறக்கடவுள், இயமன் என்னும் எட்டு வகைப்பொருள்களை அகராதி தரும். 4
“உலகில் உள்ள நல்லன எல்லாம், தகுதியாயின எல்லாம், புண்ணியமெல்லாம், ஞானமெல்லாம் அறம். எச்செயல்யாவராலும் பாராட்டப் பெறுகின்றதோ அது அறமாகும்”5
தமிழ்க்கலைக் களஞ்சியம், “மனித வினத்தின் நடத்தை, ஒழுக்கம், வாழ்க்கையின் நோக்கங்கள் முதலியவைகளைப் பரிசீலனை செய்யும் சாத்திரம் அறநூல் எனப்படும்” என்று கூறுகிறது.
திருவள்ளுவர் அறம் என்ற சொல்லினுக்குத் தந்துள்ள பொருள்களையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் மனமொழி மெய்களின் எண்ணம் – சொல் – செயலின் தூய்மையே அறம் என்பதை அறியலாம். நல்லன செய்வதும் அல்லன தவிர்ப்பதும் அறப்பண்பாகும் செயலும் முழவும் மட்டுமன்றி வழியும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவரின் அறவடிப் படையாகும்.
அறவியலின் தோற்றம் வளர்ச்சி பற்றிப் பல்வேறு சிந்தனைக்களை அறிஞர்கள் ஆய்ந்துரைத்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்குக்காண்போம்.
“தொடக்காலத்தில் மனிதன் கூட்டமாகச் சேர்ந்து வாழத்தலைப்பட்டான்: அதன் பின்னரே அவனிடம் அறிவியல் எண்ணங்கள் தோன்றி. மருதநில நாகரிகமே சிறந்த பண்புகளைத் தோற்றுவித்தது. மனிதனது பழக்க வழக்கங்கள் எண்ணங்கள் செயல்கள் யாவும் மரபுணர்வால், சமுதாயத்தால் கட்டுப்படுத்தப்பட்டன. இவ்வாறு வழங்க ஒழுக்க நெறியில் மக்கள் படிப்படியான வளர்ச்சியைப் பெற்றனர்.6
[sdm-download id=”376″ fancy=”1″ new_window=”1″ color=”orange” button_text=”தரவிறக்கம்”]
nice
good
nice good
good one
nice story…
good story
good line