பாவலர். பேராசிரியர். முனைவர்.

வானிலா – வரலாற்றுக் கவிதை நாடகம்

வானிலா - வரலாற்றுக் கவிதை நாடகம்

கா. அரங்கசாமியின் வானிலா நாடக அமைப்பும் நிகழ்வும்

– முனைவர். எண்ணம்மங்கலம் அ. பழனிச்சாமி
பார்வதி நகர், குள்ளம்பாளையம் பிரிவு, கோபி.

ஒவ்வொரு படைப்பாளியின் படைப்பும் ஏதாவதொரு குறிக்கோளுடனேயே அமைகின்றது. நேற்றைய வரலாறாயினும் இன்றைய வாழ்க்கையானினும் அவற்றிலுள்ள எத்தனையே நிகழ்வுகளைப் படைப்பாளன் காண்கின்றான். அவற்றைப் பற்றிச் சிந்திக்கின்றான். சிலவற்றால் அவன் மனம் களிப்படைகின்றது. சிலவற்றால் அவன் மனம் துன்புறுகின்றது. சில நிகழ்வுகள் அவனைக் கொதித்தெழச் செய்கிறது. சில அவனை வழிநடத்துகின்றன. இப்படி படைப்பாளன் எத்தனையோ வகைகளில் நேற்றைய, இன்றைய வாழ்க்கை முறைகளால் பாதிக்கப்படுகின்ற பொழுது அப்பாதிப்பைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றான். அப்பகிர்ந்து கொள்ளலே அவனின் படைப்பாக அமைகிறது. இப்படிப் படைப்பாளனின் உள்ளத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கும் கருத்துக்களுக்கும் வடிவம் கொடுக்க எந்தவகை இலக்கியத்தையும் தேர்ந்தெடுக்கலாம். அது கவிதையாகவோ, காப்பியமாகவோ, சிறுகதையாகவோ, புதினமாகவோ, நாடகமாகவோ இருக்கலாம். இவ்வகையில் படைப்பாளர் கா. அரங்கசாமி தன் உள்ளத்துப் பாதிப்பை “வானிலா” என்னும் கவிதை நாடக அமைப்பில் வெளிப்படுத்தியுள்ளார். இந்நாடகத்தின் அமைப்பையும் நிகழ்வுகளையும் காணலாம்.

3 Comments
  1. good…

  2. நாடகம் nice..

  3. nice.

Leave a Reply to Anbu